பிக் பேங் சோதனை ?

பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீ. ஆழத்தில் பிரம்மாண்டமான பிக் பேங் அணுச் சோதனை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக நேற்று இரான், துபாய், இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பெரிய அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரிய அணுசக்தி மோதலால் பிரபஞ்சம் தோன்றியது என்ற பிக் பேங் (Big Bang Theory) கோட்பாடே இன்றளவும் பெரிதாக நம்பப்பட்டு வருகிறது.

அணுப்பொருட்கள் தோன்றினாலும் அது எவ்வாறு திடப்பொருட்களாக மாறுகிறது என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது.

எனவே பிக் பேங் நடந்து முடிந்தவுடன் பிரபஞ்சம் எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு மாதிரிச்சூழலை உருவாக்கி பரிசோதனை செய்ய ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம் (செர்ன் - இது பிரெஞ்ச் வார்த்தை) திட்டமிட்டது. அணுப்பொருட்கள் திடப்பொருளாக மாறுவதற்கான அணுக்களை இணைக்கும் அந்த பொருளுக்கு "காட்ஸ் பார்ட்டிக்கிள்" அதாவது "கடவுள் பொருள்" என்று 1964-ஆம் ஆண்டு விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் பெயர் சூட்டினார்.

அணுவில் உள்ள புரோட்டான், நியூட்ரான் போன்றவையே மிக நுண்ணிய பொருள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதைவிடவும் ஒரு நுண்ணிய பொருள் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அணுக்களை இணைத்து, பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள அனைத்து திட மற்றும் திரவ பொருட்களுக்கும் காரணமான அந்த மூல அணு எது என்பதை கண்டுபிடிக்க நடத்தப்பட்டு வரும் சோதனையே இந்த பிக் பேங் சோதனை.

இந்த ஆராய்ச்சி விஞ்ஞான ஆய்வுகளிலேயே அதிக செலவாகும் ஆய்வு என்று கருதப்படுகிறது. 3.8 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆய்வை நடத்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிலையம் (செர்ன்) பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் குழாய் வடிவிலான சோதனை மையத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ராட்சதக் குழாயின் இரு முனைகளிலும் பெரிய தூண் வடிவில் புரோட்டான்களை வெளிவிடும் குழாய்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து நேருக்கு நேர் புரோட்டான்களை வெளியேற்றி அவைகளை மோதவிட்டு, அந்த மோதலில் வெளியேறும் வெப்பச் சக்தியிலிருந்து எவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது என்பதை ஆராய இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அப்படி மோதும்போது ஒரு டிரில்லியன் (1 டிரிலியன் = 1000 பில்லியன்) டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதனை தாங்கும் வண்ணம் மிகப்பெரிய வெப்பக்குறைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதனை நம்புவதற்கில்லை என்றும், இந்த அணு வெடிப்புச் சோதனையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று பரவலாக அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனையால் கறுந்துளைகள் (Black Holes) தோன்றி, அளவில் பெரிதாகி பூமியையே விழுங்கிவிடும் என்று விஞ்ஞானிகளில் பலர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாழ்வதற்கான உரிமைக்கு எதிரான பரிசோதனை இது என்று இந்த பரிசோதனை மீது வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்தப் பரிசோதனைக்கு ஆதரவளிக்கும் விஞ்ஞானிகளோ, கடந்த பில்லியன் ஆண்டுகளில் அண்டவெளியில் இதைவிட மிகப்பெரிய அணு மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதற்கு நமக்கு சாட்சியம் உள்ளது, ஆனால் இன்னமும் பூமி இருந்து கொண்டுதானே இருக்கிறது என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஜெனீவாவில் இந்த பரிசோதனை நடத்தப்பட்ட இடம், யூரேஸியன் புவிப்பெரும்பாறைகளுக்கு (Euro - Asian Tectonic plates) அருகில் உள்ளது, இதற்கும் அருகில் அரேபியாவையும் இந்தியாவையும் (Arabian and Indian Tectonic Plates) தாங்கும் பெரும்பாறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த பரிசோதனைகளினால், இரானில் முதலில் 6.1 என்ற ரிக்டர் அளவில் கடும் நில நடுக்கமும், பிறகு இந்தோனேஷியாவில் 6.7 ரிக்டர் அளவிலும், துபாய் முழுதும் நேற்று சிறிய அளவில் பல நில நடுக்கங்களும், இன்று ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 7 என்று பதிவான பூகம்பமும் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

பிரபஞ்ச ரகசியத்தை அறிய நடத்தப்படும் இந்த ஆராய்ச்சி பூமியை அழித்து விடும் என்று பலர் எச்சரித்து வருகின்றனர். ஆனால் செர்ன் விஞ்ஞானிகளோ அந்தப் பேச்சுக்கள் அனைத்தும் முட்டாள்தனமானவை என்று கூறிவருகின்றனர்.

நேற்று நடைபெற்றது சற்றே சிறிய அளவு சக்தி கொண்ட அணு மோதல்தான், அக்டோபர் 21ஆம் தேதிதான் உயர் சக்தி அணுமோதல் பரிசோதனை நடத்தப்படவுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நேற்றைய பரிசோதனைகளால் விளைந்தவைதானா நேற்றைய, இன்றைய பூகம்பங்கள் என்ற கேள்விக்கிடையே நாம் அக்டோபர் 21ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி:வெப்துனியா தமிழ்