உன்னால் என்ன செய்ய முடியும்?

உன்னால் என்ன செய்ய முடியும்?
உயிரைப் பறிக்கும் நீ
உணர்வைப் பறிக்க முடியுமா?

அகதியாக்கலாம்..
அநாதையாக்கலாம்..
ஒருபோதும் அடிமையாக்க முடியாது.
இன்றைய இழப்புக்கள்
நாளை உயிர்ப்புக்களாகுமென உரமேற்றிக் கொள்கிறோம்.
கல்லறைகளே எங்கள் கருவறைகள்.
நாங்கள் என்றுமே உயிரணுக்கள்.
உருக்குலைக்க முடியாது.
எச்சரிக்கையாய் இருங்கள்.....