நாகரீகம் என்ற போர்வையில் பல தீமைகளை நாமே தேடிக்கொள்கின்றோம். இன்று எம் இளைஞர்களில் அதிகமானோர் புகைப்பிடித்தல், போதைப்பொருட்கள் உப யோகித்தல் மற்றும் இது போன்ற பல தீமைகளை நாகரீகம் என்று பறைசாற்றிக்கொண்டு தவறான பாதைக்கு தாமாகவே இழுத்துச் செல்லப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர் பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தன்னுடைய ஆய்வில் கூறுகின்றது.
இன்று எமது நகர்ப்புறங்களில் நவீன உணவகம் என்ற பெயரில் நடன உணவகமாக மாறி விட்ட பல நடன விடுதிகள் இளைய சமுதாயத்தினை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. மெல்லிய விளக்கொளியில் இன்றைய இளைஞர், யுவதிகள் கூத்தும், கும்மாளமுமாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு போதைப் பொருட் களை எந்தெந்த வழியிலெல்லாம் பயன்படுத்தலாம் என்று தனி வகுப்பே நடத்தப்படுகின்றது.
மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் இவ்விதமான பழக்கங்கள் சிறு குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. காரணம் அவர்கள் தமது வீடுகளை மதுச்சாலைகளாக ஆக்கிக் கொண்டமையேயாகும். எமது நாட்டின் சில பகுதிகளிலும் இப்பழக்கம் நடைபெறுவதை எம்மால் அறியக்கூடியதாக வுள்ளது. இதனை பார்க்கும் வீட்டில் உள்ள பிள்ளைகள் சிறு வயதிலேயே ‘குடிமக்களாக’ மாறிவிடுகின்றனர்! பெரும்பான்மையானோர் 17 வயதில் இருந்து 25 வயதுக்குள் தான் இப்பழக்கத்தை பழகுகின்றனர்.
வெளியில் தனி இடங்க ளெடுத்து தங்குவதும், நண்பர்கள் அறையை நாடிச் செல்வதும் தொழில் நிமித்தம் வெளியே செல்வதும் மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களை பாவிப்பதற்கும், நெறிபிறழ்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலான திரைப்படங் களைப் பார்ப்பதற்கும் மற்றும் புகைத்தல் போன்ற பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. இவற்றிற்கு யார் காரணம்? பெற்றோர்களே! சிந்தியுங்கள்.......
No comments:
Post a Comment