சிக்கித் தவித்து தேடிவந்தேன்


சுற்றி சுற்றி வட்டமிட்டாய்
உள்ளம் எங்கும் முத்தமிட்டாய்

தேன் குழைய பேசி என்னை
தேனி போல மொய்கவைத்தாய்

காத்திருந்து கதைகள் பேசி
காதல் வலை வீசிச் சென்றாய்

கள்ளமில்லா எந்தன் நெஞ்சில்
காதல் விதை தூவிச் சென்றாய்

எட்டி நின்றேன் ஏணிப்படியில்
கிட்டவந்து இறக்கி விட்டாய்

என் உள்ளம் எல்லாம்
உன் சிந்தை என்றாய்

சிக்கித் தவித்து தேடிவந்தேன்
தேடாமல் நீயும் போனது ஏனோ

2 comments:

இரா. வசந்த குமார். said...

காதலை பத்தி ரொம்ப எழுதி இருக்காரே.. ரொம்ப பயங்கரமான ஆளா இருப்பாரோ?

♥ தயா பாலா ♥ said...

நன்றி நன்றி.....