இணையத்துடண் பிணைக்கப்படிருக்கும் எந்தவொரு சாதனத்திற்கும் தனித்துவமான விலாசம் (IP Address) இருக்கவேண்டியது அவசியம் என்பது உண்மைதான். இந்த விலாசங்கள் Static, Dynamic என இரு விதமாக வழ்ங்கப்படுகிறது. ஆனால் பல கம்பியூட்டர்கள் ஒரே விலாசத்தை பயன்படுத்தப்படக்கூடிய ஒரு தந்திர முறையும் உண்டு. அதுதான் Router. Static விலாசம் மாற்றமடையாதது. ஒரே விலாசம் எப்போதும் நெட்வேர்க் நிர்வாகியால் அல்லது இணைய சேவை வழங்குநரால் தரப்பட்டு, அந்த விலாசத்தை மாத்திரம் ஏற்று, அனுசரித்து நடக்க எமது கம்பியூட்டரை நாம் configure செய்வதாகும்.
Dynamic IP Address என்பது இணையத்தில் நுழையும்போது ஒரு கம்பியூட்டருக்கு அவ்வப்போது கொடுக்கப்படும் விலாசமாகும். விண்டோஸின் Transmission Control Protocol / Internet Protocol (TCP/IP) தொடர்புகளின் default வழிமுறை Dynamic Host Configuration Protocol கும். இது XP யை இன்ஸ்டால் செய்யும்போதே நிறுவப்படுகிறது. இதை பயன்படுத்தி கம்பியூட்டர் இணைத்தில் தனக்கு அடுத்ததாக மேலேயுள்ள சாதனத்திற்கு,(ISP யின் Server கம்பியூட்டர்) தனக்கு ஒரு IP Address வேண்டும் என ஒரு செய்தியை விடுக்கிறது. விலாசம் உடன் கிடைக்கும். கிடைத்தவுடன் அதை பாவித்து இணைத்தில் கம்பியூட்டர் பிரவேசிக்கும் இந்த விலாசம் Dynamic விலாசமாகும். கம்பியூட்டரை நிறுத்தியவுடன் இந்த விலாசமும் அற்று போய்விடும். ஆனால் விலாசங்களுக்கு கேள்வி (Demand)அதிகமில்லாமல் அதாவது வேறு பல கம்பியூட்டர்கள் நீண்ட நேரத்திற்கு இணைத்துடன் தொடர்பற்றிருந்தால் இந்த கம்பியூட்டரை அடிக்கடி நாம் இயக்கும்போது அதே விலாசம் மீண்டும் இந்த கம்பியூட்டருக்கு கிடைக்கும். இந்த கம்பியூட்டர் நீண்ட நேரம் உறங்கிக்கிடந்தால் விலாசங்களுக்கு கேள்வியும் அதிகமிருந்தால் இந்த விலாசம் வேறு யாருக்கும் கொடுக்கப்படலாம்.
Server என்பதும் ஒர் கம்பியூட்டர்தான். ஆனால் சக்திமிக்கதாகவும் கொள்திறன் அதிகமானதாகவும் இருக்கும். கோப்புக்களை இதில் நிறுவி, வேறு கம்பியூட்டர்கள் இணைத்தினூடே இதை பார்த்து அந்த கோப்புக்களை டவுண்லோட் செய்யமுடியுமென்றால் அந்த கம்பியூட்டர் ஒரு File Server. இதேபோல்Web Server, Printer Sever என பலவகை உண்டு. இந்த Server கள் எல்லாம் Static Address களைத்தான் உபயோகிக்கின்றன. விலாசம் அடிக்கடி மாறினால் எப்படி மற்ற கம்பியூட்டர்கள் இவற்றை கண்டுகொள்ளும்?
இ-மெயில் தேவைகட்கும், உலாவருவதற்கும் மாத்திரம்தான் இணைய இணைப்பு தேவையெனில் அவர்கட்கு Dynamic address தான் பொருத்தமானது.
பல கம்பியூட்டர்கள் ஒரு இணைய தொடர்பை பயன்படுத்துவதற்கு வழிசெய்பவைதான் Router கள். இந்த Router கள் தனித்துவமான விலாசத்தை இணையத்திலிருந்து பெற்றுக்கொண்டு, தனக்கு கீழ் உள்ள கம்பியூட்டர்களுக்கு இந்த Router கள் DHCP க செயல்பட்டு தாமாக வேறு விலாசங்களை வழங்குகின்றன, தகவல்கள் இணையத்திலிருந்து இந்த Local கம்பியூட்டர்களுக்கு வரும்போது Router இந்த Local விலாசத்தை மனதில் வைத்து தகவல்களை பிரிதது அந்தந்த கம்பியூட்டர்களுக்கு அனுப்புகின்றது. எந்தெந்த Route இல் போகவேணுமென்று வழிகாட்டி கொடுக்கின்றது. இதனால் அதற்கு Router என பெயர் ஏற்பட்டது. Router பாவிப்பதன் பக்கவிளைவு என்னவெனில் Router க்கு Static விலாசமும் கீழுள்ள கம்பியூட்டர்களுக்கு Dynamic விலாச்மும் கிடைக்கலாம். அல்லது மாறியும் ஏற்படலாம்.
No comments:
Post a Comment