அமெரிக்கா-ஆஸ்திரேலியாவின் முன்னணி " psychic " (நம் ஊரில் குறி சொல்லும் ஆட்கள் மாதிரி) பிளாசம் குட்சைல்ட் என்பவர் தான் இந்த 'கதையை' ஆரம்பித்து வைத்தார். அதை பல்வேறு நாடுகளில், குறிப்பாக மேற்கு நாடுகள், உள்ள " psychic "-கள் வழி மொழிந்துவிட்டனர்.
பிளாசம் சொல்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) ''அமெரிக்காவின் பாலைவனப் பகுதியில் மாபெரும் ஸ்பேஷ் ஷிப் வந்து இறங்கப் போகிறது. அதிலிருந்து இறங்கும் வேற்று கிரகவாசிகள் பூமியில் வசிக்கும் நமக்கு அன்பையும் ஆதரவையும் தரப் போகிறார்கள்''. இதை ஏலியன்சே தன்னிடம் தெரிவித்ததாக ஒரு போடு போட்டிருக்கிறார் பிளாசம்.
இதை விடுவார்களா சூதாடிகள். ஏலியன்ஸ் வருவார்களா இல்லையா என்பதை வைத்து உலகம முழுவதும் பெரும் சூதாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றனவாம். இதில் மில்லியன் கணக்கில் டாலர்கள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனவாம்.
இதைவிட, ஏலியன்ஸ் ஏன் வருகிறார்கள் என்பதற்கு இன்னொரு கதையையும் சொல்கிறார்கள்.
உலக அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, உலக நிதி நிலைமையே பெரும் தள்ளாட்டத்தில் இருப்பதால் அதிலிருந்து மனித குலத்தை காப்பாற்றத்தான் இந்த வேற்று கிரகவாசிகள் வருகிறார்கள் என்று ஒரு குரூப் கதைத்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் நான் வானத்தையே தான் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன் என்கிறார் பிளாசம்.
ஸ்பீல்ஸ்பர்க், நைட் ஷ்யாமளனுக்கு அடுத்த படத்துக்கான கதை ரெடி!
நன்றி தற்ஸ் தமிழ்
No comments:
Post a Comment