அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!


ரசிய சோசலிசப் புரட்சி:
நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துகள்!

“ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்

ஒழிக்க வரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள்…..” “பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது!…”

“தனிச்சொத்தை ஒழித்த்தும் எல்லாச்செயற்பாடுகளும் நின்று போய்விடும், அனைத்து மக்களும் சோம்பேறித்தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது. இது மெய்யானால் முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்கவேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சுமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை…”

“தற்போதுள்ள உங்களுடைய சமூதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச்சொத்து ஏற்கெனவே இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஒரு சிலரிடத்தே தனிச்சொத்து இருப்பதற்கே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கானோரிடத்தே அது இல்லாது ஒழிந்த்துதான்.”

“ஆக, சமுதாயத்தின் மிகப்பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாது ஒழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாகக் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம்.

சுருங்கச் சொல்வதெனில் உங்களுடைய சொத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று ஏசுகிறீர்கள். ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்…”

“கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மூடிமறைக்க மனம் ஒப்பாதவர்கள். இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்ய்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள்.

அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!

பாட்டாளிகள் தமது அடிமைச்சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ்
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலிருந்து…


http://vinavu.wordpress.com/2008/11/07/nov71/

No comments: