நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'



ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே
நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக
இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த
அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."

"என்ன ஆயிற்று அவருக்கு?"

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது"

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்"



நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட
பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம்
சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு
தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல,
குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட
சொல்றீங்க?"

நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு
டிப்ஸ் கொடுத்தேன்"



அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு
சொன்னிங்க.



"ஆடி மாத கோர்ட்டில் கேஸ் போடாதே என்று சொன்னனே!"
"என்ன ஆச்சு?"
"தள்ளுபடி ஆயிடுச்சு!"




துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே
சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம்
காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன்
ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா
எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி
சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.
ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்?
பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு
இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு,
அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார்
அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத்
துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில
விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான்
சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

7 comments:

Vishnu - விஷ்ணு said...

நல்ல தொகுப்பு.

நிகழ்காலத்தில்... said...

சூப்பர்

Anonymous said...

:-)) :-)) :-))

Suresh Kumar said...

பதிர்ந்து கொண்டமைக்கு நன்றி நல்லா இருக்கு

cbraju said...

jokes are all very good.

ப்ரியமுடன் வசந்த் said...

என்னாங்க இது நல்லாருக்கா என்னோட பதிவ அப்பிடியே போட்டுருக்கீங்க...

♥ தயா பாலா ♥ said...

நன்பரே மன்னிக்க வேண்டும். எனக்கு மெயிலில் வந்தது.. எனக்கு பிடித்து இருந்ததால்தான் போட்டனான்... "நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்"
ஆதலால் என்று தலைப்பிட்டுலேன்..