16 வயதில் 7 குழந்தைகள்: அதிசயிக்க வைக்கும் தாய்


பியூனோஸ் ஏரெஸ் :

பார்ப்பதற்கு, அவரது தம்பிகள், தங்கைகளை போலத் தான் தெரிகிறது. ஆனால், அவர் 16 வயதில் ஏழு குழந்தைகளுக்கு தாய். தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டின் தலைநகர் போனஸ் அயர்ஸ் நகரில் இருந்து 480 கி.மீ., தொலைவில் உள்ள லியோனஸ் என்ற நகரில், ஒரு விவசாய பண்ணையில் தான் பமீலா என்ற இந்த அதிசய தாய் வசித்து வருகிறார்.
இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், பாய் பிரண்ட் மூலம், முதல் முதலாக 14 வயதில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு பின் மேலும் இரண்டு பாய் பிரண்டுகள் பமீலாவை கவர்ந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு பிரசவங்களில், ஒவ்வொன்றிலும் தலா மூன்று குழந்தைகள் பிறந்தன.

"16 வயதில் ஏழு குழந்தைகளை பெற் றெடுத்தது, உலகிலேயே மிகவும் அபூர்வமானது' என்று, டாக்டர்கள் வியக்கின்றனர். ஆனால், குழந்தைகளின் மூன்று தந்தைகளையும் மீண்டும் சந்திக்க பமீலா விரும்பவில்லை. தற்போது, துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் தனது தாய் மக்டலினா, உடல் ஊனமுற்ற தந்தை ஜோசுடன் வசித்து வருகிறார். காலை 7 மணிக்கு எழுகிறார். குழந்தைகளை குளிப் பாட்டி, உணவு ஊட்டி, துணி துவைத்து, வீட்டை சுத்தம் செய்து இரவு படுக்கைக்கு செல்ல அதிகாலை 4 மணியாகிவிடுகிறது.

ஏழு குழந்தைகளையும், உடல் ஊனமுற்ற தந்தையையும் கவனித்துக் கொள்வதால், மூன்று மணி நேரம் தான் தூங்க முடிகிறது. "ஒவ்வொரு நாளும் போராட்டமாகத் தான் கழிகிறது. ஆனால், எதையும் நான் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. நல்ல தாயாக இருக்கவே முயற்சிக்கிறேன்' என்கிறார் பமீலா."என்னை கவரும் இன்னொரு ஆணை சந்தித்தால், அவருக்கு வாழ்க் கை துணையாக இருப்பேன். ஆனால், நிச்சயமாக இனி குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டேன்' என்றும் திட்டவட்டமாக கூறுகிறார் பமீலா.

No comments: