அதிவேக விமானம்


வரையறுக்கும் கோட்டினை (Terminator) வேகத்தால்
வெல்லக்கூடிய தன்மை கொண்ட பயணிகள் விமானம் என்று சொல்வதற்கு ஒரே விமானம் தான் இருந்தது.... காண்காட்!

இந்த தன்மை உள்ளதால், மாலையில் லண்டனிலிருந்து புறப்பட்டு மேற்கு திசையில் அமெரிக்காவை நோக்கி பறக்கும் காண்காட் சூரியனை பின் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தது.

அ°தம சூரியனுடன் பயணம் செய்து பயணத்தின் இறுதியில் சூரியனும் காண்காடும் ஒரே நேரத்தில் அமெரிக்காவில் சென்று சேரும்போது அமெரிக்க மக்களுக்கு அது உதய சூரியன்!

1986 நவம்பர் 1-ம் தேதி ஒரு காண்காட் விமானம் 32 மணி நேரம் கொண்டு பூமியை ஒரு தடவை வலம் சுற்றியது வரலாறு சம்பவம்!

1950 காலகட்டத்தில் விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் முன்னணியில் இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து வடிவமைத்தது இந்த அதிசய விமானத்தை.

இதற்கென்று அந்த இரண்டு நாடுகள்க்கிடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது.

அதிகமான சத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மற்ற நாடுகள் இந்த விமானம் வாங்குவதற்கு முன் வரவில்லை.

ஒரு விஷயத்தை மட்டும் அந்த காலத்தில் அவர்களால் சரியாக கையாள முடியாமல் போனது. இந்த விமானத்தின் இயந்திரம் இயங்கும்போது வெளி வரும் ஒலியை குறைப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

ஜெட் ரக இயந்திரங்களின் ஒலி 150 டெசிபல் என்ற அளவில் இருந்தபோதும் கூட காண்காட் விமானத்தின் இயந்திரம் இயங்கும்போது வெளிவரும் சத்தம் 200 டெசிபெல் அளவில் இருந்தது.

இதே காரணத்தால் பல்வேறு நாடுகள் காண்காடை வரவேற்கவில்லை. மலேஷியா நாடு காண்காட் ரக விமானங்கள் அந்த நாட்டு வான்வெளிப்பகுதியில் பறப்பதற்கும் கூட தடை விதித்தது.

கடைசியில் பிரிட்டனின் பிரிட்டீஷ் எயர்வேஸும், பிரான்சின் எயர் பிரான்சும் சேர்ந்து இந்த விமானங்களை வைத்து சேவை புரிந்து வந்தார்கள்.

60,000 அடி உயரத்தில் ஒலியைவிட அதிகமான வேகத்தில் பறந்து செல்லக்கூடிய சக்தி வாய்ந்த இந்த காண்காட் ரக விமான தயாரிப்பு மற்றும் சேவைகள் 2003 ம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டது.

மொத்தம் 20 காண்காட் விமானங்களை தயாரித்து, 26 ஆண்டுகள் சேவை புரிந்த காலையளவில் ஒரே ஒரு காண்காடு விமானம் மட்டும் தான் விபத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரான்சில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து பறந்து உயரும் காண்காடின் டயரில், காண்காட் புறப்படுவதற்கு சற்று முன் தறையிறங்கிய இன்னும் ஒரு விமானத்திலிருந்து ஊர்ந்து விழுந்த ஒரு டைட்டானியம் கம்பி குத்தி டயர் பஞ்சராகி விட்டது, மேலும் எரிபொருள் டேங்க் சேதம் அடைந்ததால் பறந்து உயர்ந்த சில நொடிகளில் அந்த விமானம் பற்றி எரிந்தது.

இந்த விமான சேவை நிறுத்துவதற்கான முக்கிய காரணம் அதன் சத்தம் தான். சத்தம் என்றால் அது வெறும் சத்தம் அல்ல! இயற்கையின் இடியை வெல்லும் தனி காண்காட் இடிமுழக்கம் !

ஒரு தடவை ஒரு காண்காட் விமானம் தில்லி விமான நிலையத்தில் தறையிறங்கியபோது அந்த விமான நிலையத்தில் மட்டுமல்லாமல் வெளியே கண்ட்ரோல் டவர் மீதுள்ள கண்ணாடி ஜன்னல்கள் அத்தனையும் நொறுங்கி விட்டது!

காண்காட் ஒலியைவிட இரட்டை வேகத்தில்
Supersonic


பயணம் செய்யும்போது அந்த விமானத்தின் பாதையில் செயற்கை மேகங்களே உருவாகும் நிலைமை இருந்தது.

விமான சேவை துறையில் என்ன தான் புரட்சிகள் வந்தாலும், காண்காடுக்கென்று ஒரு தனி இடம் வரலாற்றில் உண்டு.

விடைபெற்றது சாதாரண விமானம் அல்ல - விமானங்களின் பேரரசர்!

No comments: