கொசோவோவின் வரலாறு

டிம் ஜூடா என்ற எழுத்தாளர் “பரம்பரை பரம்பரையாக கொசோவொவின் பிரச்சினைகளுக்கு அந் நாட்டின் மலைப் பகுதிகளே காரணமாக இருந்து வந்துள்ளன” என்று குறிப்பிடுகிறார். பல பரம்பரைகளாக கொசோவோ என்ற ஐரோப்பிய நாடு சேர்பியர்களினதும் அல்பேனியர்களினதும் கருத்து வேறுபாடுகளின் சமர்க்களமாக இருந்து வந்துள்ளது.

சேர்பிய அல்பேனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் பல காலங்களாக கொசோவொவின் வரலாறு சம்பந்தமாக தத்தம் கடும் வாதங்களினை முன்வைத்து வருகிறார்கள்.

அல்பேனியர்கள் கூற்றுப்படி அவர்களே கொசோவோவின் உண்மையான குடிமக்கள். அவர்கள் இலைரியன்கள் எனப்படும் ஆதிவாசிகளின் வழிவந்தோர்களாவர்.

சேர்பியர்களோ, கி.பி.1500 களிலிருந்த அவர்களின் பல்வேறு இராச்சியங்களின் இதயப்பகுதியாக இருந்ததே கோசோவோ என்றும் அக்காலத்தில் அங்கு அல்பேனியர்கள் இருந்திருப்பின் மிகவும் அற்ப சொற்பமானவர்களே இருந்திருக்கக் கூடும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் சேர்பியர்கள் தங்களின் வாதங்களுக்கும் கூற்றுகளுக்கும் சான்றுகளாக கொசோவின் பூகோள தரைக் குறிப்புக்களாக இருக்கும் பழங்கால கிறிஸ்த்தவ ஆலயங்களையும் ஆதிகால கிறிஸ்த்தவ மடாலயங்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

கொசோவொவின் வரலாற்றில் யூன் 28, 1389 எனும் திகதி மிக முக்கியம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது.

சேர்பியர்களின் சரித்திரத்தின் படி, சேர்பிய இளவரசரான லாசர் என்பார் கொசோவோவிலுள்ள “கரும் பறவைகளின் வயல்” எனப்படும் “போல்யே” என்ற இடத்தில் வைத்து தனது 35,000 போர் வீர்ர்கள் கொண்ட படையினரின் உதவியுடன் கிட்டத்தட்ட 50,000 போர் வீர்ர்களைக் கொண்ட ஒட்டோமான்கள் எனப்படும் துருக்கியரை எதிர்த்து கடும் போர் புரிந்தார் என்றும், அப் போரில் இளவரசரின் படைகள் அதிக பலம் பொருந்திய ஒட்டோமான்களின் படைகளிடம் தோல்வியுற சமர்களத்திலேயே இளவரசர் லாசரும் வீரச் சாவடைந்தார் என்றும் வரலாறு கூறுகிறது.

இளவரசர் லாசரின் இழப்பு மாபெரும் தற்கொடையாகக் கருதப்படினும் அவரது தோல்வியானது துருக்கியரின் கொசோவோ மீதான ஆக்கிரமிப்பிற்கும் அவர்களின் 300 வருட கால ஆட்சிக்கும் வழிவகுத்ததென்பது என்னவோ மறுக்க முடியாததாகி விட்டது.

நவீன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சேர்பியர்கள் ஒட்டோமான்களிடம் கடும் தோல்வியுற்றிருப்பினும் கொசோவோ போர் என்னவோ உண்மையாக ஒரு வெற்றி தோல்வியற்ற சமநிலையிலேயே முடிவுற்றதாகக் கருதுகின்றார்கள்.

இன்றைய காலகட்டத்தில் அல்பேனியர்களும், பொஸ்னியர்களும் சேர்பியர்களுடன் சேர்ந்து இப் போரில் ஈடுபட்டனரெனவும் இன்றைய சேர்பியாவின் மற்றைய பகுதிகள் ஒட்டோமான்களெனப்பட்ட துருக்கியருக்கு ஆதரவாக களமிறங்கின எனவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

எப்படியோ, 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சேர்பிய தேசியவாத மீள்விழிப்பூட்டலின் போது, சேர்பியர்களின் கற்பனைகளால் ஏற்பட்ட கோசோவோவின் மீதான பழி தீர்க்கும் வெறியில் அவர்களின் வரலாறானது இன்றுவரை தனது செல்வாக்கினைச் செலுத்தி வருகின்றது என்பது வெள்ளிடைமலை.

துருக்கியின் ஆட்சியில் சேர்பியா
1459 அளவில் கொசோவோ உட்பட முழு சேர்பியாவும் துருக்கியின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டது.

மெதுவாக ஆனால் திடமாக சேர்பிய குடிப்பரம்பல் மாற ஆரம்பித்தது. பெரும்பாலான சேர்பியர்கள் வடக்கு நோக்கி பொஸ்னியா, ஒஸ்ட்றியா, ஹங்கேரி போன்ற நிலப்பகுதிகளுக்குக் குடி பெயர்ந்து சென்றனர்.

இக் குடிப்பெயர்வினைத் தடுத்து நிறுத்தும் முயற்சி 1689 இல் தோல்வியுற குடிபெயர்ந்து செல்லும் சேர்பியர்களின் தொகை அதிகரித்தது.

அப்படி குடிபெயர்ந்து சென்ற சேர்பியர்களின் கொசோவோ வயல் நிலங்களுக்கு, பெரும்பாலாக துருக்கியரின் பரம வைரிகளாக விளங்கிய, மலைவாழ் முஸ்லீம் அல்பேனியர்களே வந்தனர்.

1878 இல் மீண்டும் சேர்பியா தன்னாதிக்கமுள்ள ஒரு சுதந்திர நாடாயிற்று. ஆனால் இன்னமும் கொசோவோ ஒட்டோமான்களின் ஆக்கிரமிப்பின் கீழாகவே இருந்த்து.

இவ்வாண்டில் தான் கொசோவோவில் மட்டுமில்லாது அனைத்து அல்பேனியர்களுக்குமான அல்பேனிய தேசியவாத மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட பிறைசாரன் லீக்குக்கு அத்திவாரமிடப்பட்டது.

1912 அளவில் சேர்பியாவும் மற்றைய சுதந்திர பால்க்கன் குடியரசுகளும் இணைந்து ஐரோப்பாவில் மிஞ்சியிருந்த துருக்கியின ஒட்டோமான் ஆட்சியாளர்களை வெளியேற்றினர்.

கொசோவொவின் செர்பியர்களுக்கு சேர்பிய இராணுவத்தினரின் வருகை ஒரு விடுதலையாக அமைந்தது.

ஆனால் இன்று பெரும்பான்மையினராக கொசோவோவில் இருக்கும் அல்பேனியருக்கோ அவ்வருகையானது படுகொலைகளுடனும் அழிவுகளுடனும் கூடிய மற்றுமொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே இருந்தது.

முதலாம் உலக யுத்த காலத்தில் சேர்பிய அதிகாரிகள் தாமாகவே 1915 இல் கொசோவொவை விட்டு வெளியேற அல்பேனியர்கள் 1912இல் இடம் பெற்ற நிகழ்வுகளுக்காக சேர்பிய துருப்பினரைப் பழிதீர்த்துக் கொண்டனர்.

மீண்டும் இதற்கெதிரான சேர்பிய பழிதீர்ப்பு 1918 இல் பின்னர் இருந்த யூகோஸ்லாவிய இராணுவம் திரும்பி வந்த போது இடம் பெற்றது.

சேர்பியர்களின் குடியமரும் முயற்சி
உள்நாட்டு போர் நிகழ்ந்த காலம் முழுவதும் சேர்பியர்கள் தமது குடிப்பரம்பலினை மீண்டும் கொசோவொவில் நிலைப்படுத்தும் கடும் முயற்சியினை, நில ஆக்கிரமிப்பாளர்களை அல்பேனியர்களின் நிலங்களுக்கு அனுப்புவதன் மூலம் மேற்கொண்டனர்.

ஆனால் சேர்பிய அரசாங்க அதிகாரிகள் தொடர்ச்சியாக அல்பேனியர்களின் புரட்சிகளையும் எதிர்ப்புக்களையும் இடைவிடாது சந்திக்கும் படி நேர்ந்த்து.

1941இல் கொசோவொவின் பெரும்பாலான பகுதிகள் முசோலினியின் இத்தாலிய அல்பேனியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

எஞ்சியிருந்த பகுதிகள் ஜெர்மனியினராலும் பல்கேரியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டன. நில ஆக்கிரமிப்பாளராக இருந்த சேர்பிய குடியேற்றவாசிகள் பத்தாயிரக்கணக்கில் வெளியேற்றப்பட்டனர்.

மார்ஷல் டிட்டோவின் யூகோஸ்லாவிய பங்காளிகளுக்கு அல்பேனிய இராணுவ வீர்ர்களை வேலைக்கமர்த்துவது கடினமாக இருந்த்து. ஆனால் எப்படியோ கடைசியில் போரின் பின்னர் கொசோவோ பெரிய அல்பேனியாவுடன் ஒன்று சேர உதவுவோம் என்ற உறுதி மொழியுடன் அவர்களைச் சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் 1945 இல் இவ்வுறுதி மொழி மீறப்பட்டது கொசோவோ அல்பேனியர்களுக்குத் தெரியவர மீண்டும் யூகோஸ்லாவிய அரசாங்கம் மீண்டும் அல்பேனிய புரட்சிகளை மீண்டும் சந்திக்க வேண்டியதாயிற்று.

1960ஆம் ஆண்டு வரையிலும் கொசோவா யூகோஸ்லாவியாவின் ஒரு மாகாணமாக கடுமையான கட்டுப்பாடுகளுக்குக் கீழ் இருந்தது. பின்னர் 1974 இல் அதற்கு யூகோஸ்லாவியாவின் மற்றைய மாநிலங்களைப் போன்று முழுமையான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

ஆனால் அந்நேரம் முதல் கொசோவோவில் இருந்த சேர்பியர்கள் கொசோவோவிற்கு முழுச் சுதந்திரம் கேட்கும் அல்பேனியர்கள் தம்மைத் துன்புறுத்துவதாக கூறி முறையிடத் தொடங்கினர்.

கொசோவொவில் ஒன்பது அல்பேனியர்களுக்கு ஒரு சேர்பியர் என்ற விகிதத்திலேயே குடிப்பரம்பல் இருந்தது. இந்நிலை சேர்பியர்களுக்கு மிகவும் துன்பம் கொடுப்பதாக இருந்தது. இதற்கு சேர்பியர்கள் பலர் புலம் பெயர்ந்து சென்றமையும் அல்பேனிய பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சியுமே காரணங்களாக அமைந்திருந்தன.

இம்மாதிரியான ஆத்திரங்களினை சேர்பிய கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த சிலொபொடான் மிலோசெவிக் என்பவர் பெருமளவில் திரித்துக் கூறி பெரும்பான்மை பலம் பெற்று அதிகாரத்துக்கு வந்தார். அதிகாரத்திற்கு வந்தவுடனேயே 1989 இல் கொசோவொவின் தன்னாட்சி அதிகாரத்தினைப் பறித்தார்.

மிலோசெவிக்கின் அதிரடி நடவடிக்கைகள் முன்னைநாள் யூகோஸ்லாவியாவில் பெரும் குழப்ப நிலையினைத் தோற்றுவித்து அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.

கொசோவோவின் அரசியல்/போராட்ட வளர்ச்சிகள்
இப்ராஹிம் ருகோவா என்ற அல்பேனிய தலைவரின் தலைமையின் கீழ் கொசோவோ அல்பேனியர்கள் அறநிலைப் போராட்டங்களினை மட்டும் மிலோசெவிக்கின் தலைமையில் செயற்பட்ட சேர்பியாவுக்குக் காண்பித்து ஒரு சமகால சுதந்திரக் குடியரசினை நிறுவினர்.

அனால் பின்னர் அவரின் அறநிலைக் கோட்பாட்டினை சோம்பேறித்தனத்தின் அடித்தளமெனக் கூறி எதிர்ப்போரின் தாக்குதல்களுக்கு திரு.ருகோவா இலக்காகி வந்தார்.

பின்னர் கொசோவொ விடுதலை இராணுவம் என்ற விடுதலை அமைப்பு ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்தது. இவ்வமைப்பில் பல கொசோவொ வாழ் அல்பேனியர்கள் இணைந்தனர்.

http://oruthakaval.com/2008/02/18/kosovo_part1/?page=2

No comments: