Microsoft இன் மேல் பலமுனைத்தாக்குதல்



படத்தை பெரிதாக்கி பார்ப்பதற்கு படத்தின் மேல் அழுத்தவும்..

மைக்ரோசாப்டின் Project Natal (cience Fiction படத்தை விட அருமையாக உள்ளது)



கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.
அதற்கு தான் Project Natal என்று பெயர்.

உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட்(Infrared) கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

fring இது VOIP தந்திரம்















உலகத்தின் இருமூலைகளில் இருக்கும் இரு கணினிகள் – அவை இணையத்தில் இணைக்கப் பட்டிருந்தால் நாம் குரல்வழி ( voice chat) மூலம் எளிதாக இலவசமாக பேசிக்கொள்ள முடியும். இது நாம் யாவரும் அறிந்த பழைய தொழில்நுட்பமே.

அந்த மாதிரியான குரல்வழி ( voice chat) இணைப்புக்கு MSN Messenger, Yahoo Messenger ,Google Talk, ICQ, Skype முதலான மென்பொருட்கள் உதவுகின்றன. அப்படியே அது வழியாய் நாம் சர்வதேச இலவச அழைப்புக்களும் செய்யலாம். ஆனால் என்ன இரு முனைகளிலும் கணினி மற்றும் இணையம் உங்களுக்குத் தேவைப்படும். கணினி பக்கத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தொல்லைதானே !

இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான கையடக்கத்தொலைப்பேசிகள் ( mobile phone’s) ஒரு குட்டி கணினி போலவே செயல்படுகின்றன. அது வழியாய் இணையம் கூட மேயமுடிகின்றது.
USA இல் இருந்து i-phone வழி Yahoo Messenger-ல் நுழைந்து லண்டனில் உள்ளவருக்கு N95 வழி Yahoo Messenger இன் மூலம் இருவரும் மணிக்கணக்கில் voice chat-ல் பேசிக்கொண்டே இருக்கலாம். இது சர்வதேச அழைப்பாகாது. அதாவது இங்கு நாங்கள் பேசும் போது தொலைப்பேசி நுட்பத்தை (Air time) பயன்படுத்தவில்லை. மாறாக VOIP எனப்படும் இணைய வழி தொடர்பையே பயன்படுத்துகின்றோம். இது உங்கள் Data Plan meter தான் கூட்டுமே தவிர தொலைப்பேசி கட்டணத்தைல்ல.

அமெரிக்காவில் AT&T “unlimited” Data Plan-னை மாதம் குறைந்த கட்டணத்தில் தருகின்றார்கள். Data Plan கட்டண கவலையின்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்.

ஒரு தகவலுக்கு எடுத்துக்கொண்டால் ஐபோன் ( iphone) வழி ஒருமணி நேரம் பேசினால் 8MB data மட்டுமே பரிமாற்றம் (transfer) ஆகியிருக்குமாம்.

இலங்கையில் Dialog, Mobital, Airtel,Tigo இணைப்புக்கள் 1KB க்கு 2 சதம் என்ற அடிப்படையில் கட்டணங்ளை அறவிடுகின்றன.

இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இந்தியாவில் உங்களிடம் இருந்தால் நீங்களும் இலவச சர்வதேச அழைப்புக்களை மேற்கொள்ளலாம் .மறுமுனை நபரிடமும் இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இருக்கவேண்டும்.அது 3G, GPRS, WiFi அல்லது EDGE என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

இது ஒரு அருமையான தந்திரம். சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள் பல தொலைபேசி அட்டைகள் கோடிகோடியாய் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் போது இதை எப்படி சம்மாளிக்கப்போகின்றார்கள் என தெரியவில்லை.

மேற்கண்ட தந்திரத்தை செய்ய உதவும் மென்பொருளின் பெயர் fring. ( VoIP over 3G, GPRS and WiFi networks)
உங்கள் கைப்பேசிக்கான சரியான fring மென்பொருளை இலவசமாக இங்கிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். http://www.fring.com/download/

fring ஆனது Skype®,Facebook, MSN® Messenger, ICQ®, Google Talk™, Twitter, AIM® , Yahoo!™, Last.fm போன்றவற்றை ஆதரிக்கிறது.
நீங்களும் இனி Skype தொலைபேசி உரையாடல்களை கையடக்கதொலைபேசியினுடாக ( mobile phone) செய்யலாம்.
இது peer-to-peer VoIP தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இப்பொழுது Twitter 2.0 க்கு இசைவாக நடக்கும் வகையில் ( new Twitter 2.0 Add-on for fring) இருக்கிறது.

டியுட்டரில் ( Twitter ) செய்திகள் வரும் போது ஒலியை தந்து ( ringing tone) நினைவூட்டுகிறது.

டியுட்டரில் ( Twitter ) செய்திகளை கையடக்க தொலைபேசி இரண்டு விதமாக கையாளுகிறது.

1. விண்டோஸ் மொபைலில் fring இல் உள்ள Add-ons பகுதிக்கு சென்று பழைய Twitter ஐ unsubscribe செய்து பின்னர் re-subscribe செய்யவும்.

( Windows Mobile- just go to the Add-ons tab inside fring, unsubscribe from the old Twitter & re-subscribe to the new Add-on. )

2. Symbian மென்பொருளில் இயங்கும் கையடக்கதொலைபேசிகளில் ( e.g :Nokia, Sony Ericsson, Samsung) புதிய fring மென்பொருளை தரையிறக்கி ( download ) பழைய Twitter ஐ unsubscribe செய்து பின்னர் re-subscribe செய்யவும்.

( Symbian handset owner, simply download the new fring version 3.37 first, unsubscribe from the old Twitter & re-subscribe to the new Add-on)

http://www.fring.com/download/

கையடக்க / செல்லிட தொலைபேசியில் (Mobile/Cell phone) தமிழ் இணையத்தளங்களை பார்க்க..











தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை இதோ…….

1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.
4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar) opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)

6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.

இணையத்தளமூடக உங்கள் கணணியை இயக்க முடியுமா?



TweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.

இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.

1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம்( Download) செய்யவும்..

2.

பின்னர் http://www.Twitter.com

என்ற தளத்துக்கு சென்று புதிய டியூட்டர் (Twitter) கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது

{Go to www.Twitter.com and create a new Twitter account for your PC (This is optional as TweetMyPC only responds for updates). This account will be used by TweetMyPC to monitor for new tweets}

3. உங்கள் பயனாளர் கணக்கை பெயர் , கடவுச்சொல் கொடுத்து TweetMyPC இயக்கவும். சற்று தாமதித்து இரட்டை சொடுக்குகள் மூலம் Twitter ஐ இயக்கி TweetMyPC ஐ ஆரம்பிக்கவும்.

{Start TweetMyPC and then fill in the login details. Wait for some time for the application to verify your login details & Double click the Twitter Icon to start TweetMyPC }

அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம்(Restart) செய்யவோ முடிகிறது.

உலகின் முதலாவது 256 GB USB Flash drive

Kingston நிறுவனம் வழங்குகிறது உலகின் முதலாவது 256GB அளவுள்ள USB Flash drive



Fujifilm 3D டிஜிட்டல் கேமரா சந்தைக்கு வருகிறது


புஜி பிலிம்(Fuji Film) நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியின் படி மிக விரைவில் Fujifilm FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும். ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடியோக்களையும் முப்பரிமாண முறையிலன்றி வழக்கமான இரு பரிமாண(2D)படங்களையும் எடுக்கவல்லது இந்த கேமரா.




இது போக FinePix Real 3D V1 என்னும் 8 இன்ச் அகலமுள்ள டிஜிட்டல் திரை சாதனத்தையும் புஜி பிலிம் அறிமுகப்படுத்தவுள்ளது.3D டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படங்களை இந்த 3D டிஜிட்டல் திரை சாதனத்தின் மூலம் பார்வையிடலாம்.இது மட்டுமன்றி முப்பரிமாண படங்களை பிரதி எடுக்க புஜி பிலிம் நிறுவனம் விஷேச காகிதங்களை தயாரித்துள்ளது.இந்த காகிதங்களின் மூலம் பிரதி எடுத்த முப்பரிமாண படங்களை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.காகிதங்களில் பிரதியெடுக்க ஆன் லைன் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.அடுத்த மாதம் ஜப்பானில் வெளியாகி செப்டம்பர் மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளது.


புரூஸ் லீ

புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸின் முடிசூடா மன்னனான புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும் வளர்ந்தது ஹாங்காங். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம்.



புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு சினிமாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள் என்பதே சினிமா கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 பிரேம்களாக மாற்றியமைத்தனர்.

இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் Grace ஒரு கத்தோலிகர்.

பெற்றோருடன் குழந்தையாக புரூஸ் லீ

புரூஸ் லீக்கு பெற்றோர்கள் ‘லீ ஜுன்பேன்’ என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை ‘ஜுன் பேன்’ சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை La Salle College-ல் (Secondary School) கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.

1959 ஆம் ஆண்டு, ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் அந்த நபரை புரூஸ் லீ கடுமையாக தாக்கிவிட சிக்கல் பெரிதானது. புரூஸ்லீயின் நலன் கருதி அவரது பெற்றோரும், அமெரிக்காவில் இருக்கும் தனது பால்ய நண்பர் வீட்டிற்கு அவரை அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் நிகழ்கையில் அவருக்கு வயது 18.

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது ‘Batman’ படத்தின் தயாரிப்பாளர் William Dozier பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது ‘The Green Hornet’, ‘Iron Side’, ‘Here Come the Brides’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,’Crawn Colony Cha Cha’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.

கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘பிக் பாஸ்’ படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இவர் யூனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன் என்ற கல்வி நிறுவனத்தில் சினிமா துறைக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படித்தார். இந்த கல்லூரியில் தான் தனது வாழ்க்கை துணைவியான லின்டா எமரியை சந்தித்தார். இவர்களுக்கு 1964 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு பிராண்டன் லீ என்ற மகனும், ஷெனான் லீ மகளும் பிறந்தார்கள். இருவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் பிராண்டன் லீ, 1993 ஆம் ஆண்டு தி க்ரோ படத்தில் நடிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.


குழந்தையுடன்


மனைவி மற்றும் குழந்தைகளுடன்

லீ தி லிட்டின் டிராகன் என்ற புனைப்பெயரும் இயக்குநர் ஒருவரால் இவருக்கு வழங்கப்பட்டது. சைனீஸ் ராசிப்பலன்படி புரூஸ் பிறந்தது டிராகன் ஆண்டு. அதனால் என்னவோ அவருக்கு அந்த பெயர் மிகவும் பொருந்திவிட்டது.

1972-ல் ‘பிஸ்ட் ஆஃப் பியூரி’ படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.

புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய ‘Way to the Dragon’ படம் ‘பிஸ்ட் ஆஃப் பியூரி’ வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை ‘ரிடர்ன் ஆஃப் தி டிராகன்’ எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக ‘Way to the Dragon’ படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் ‘என்டர் தி ட்ராகன்’. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே மிரட்டியது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

1973 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி “என்டர் தி டிராகன்” படத்திற்கு பின்னணி குரல் (Dubbing) பதிவு நடந்துகொண்டிருக்கும்போது உடம்பில் கடுமையான வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவரது உடல்நிலையில் ஒரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

ஜூலை மாதம் 20 ஆம் தேதி புரூஸ் லீயும் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ஜார்ஜ் லெசன்பையும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அதனால் அதுகுறித்த கதை விவாதத்திலும் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் “கேம் ஆஃப் டெத்” படத்தின் தயாரிப்பாளர் ரேமண்ட் சௌவ்வுடன் பிற்பகல் 2 மணிவரை புரூஸ்லீ இருந்ததாகவும், 4 மணிக்கு மேல் சக நடிகரான பெட்டி திங் பெய் வீட்டுக்கு புரூஸ் லீ சென்றதாகவும் புரூஸ் லீயின் மனைவி கூறி இருக்கிறார். அப்போது புருஸ் லீக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் சக நடிகரான பெட்டி திங் பெய் அவருக்கு வலி நிவாரணி மருத்து கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து சரியாக 7.30 மணிக்கு ஓய்வெடுக்க செல்வதாக கூறிவிட்டு தூங்குவதற்கு சென்ற புரூஸ் லீ, மீண்டும் எழாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் உடனே குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், அதற்குமுன் அவரை பிழைக்க வைக்க முயற்சி செய்ததாக மருத்துவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால் ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே புரூஸ் லீயின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இறுதியில், அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், கண்களில் தென்படும்படி அவரது உடலில் எந்த காயங்களும் இல்லையென்றும், ஆனால் அவரது மூளையின் அளவு மட்டும் 13 சதவீதம் பெரிதாகி இருந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்..

ஆனால் அவரை போட்டியாக நினைக்கும் சிலர் அவருக்கு உணவில் நஞ்சு கலந்துகொடுத்திருக்கிருக்கல�
�ம் என்றும் கூறப்படுகிறது.

இன்றுவரை இளைஞர்களது ஆதர்ஷ நாயகனான புரூஸ் லீ நடித்தது வெறும் 5 படங்கள் மட்டுமே.
உலத்தையே புரட்டிப்போட்ட அந்தப் படங்கள்

என்டர் த டிராகன்
த பிக் பாஸ்
ரிட்டர்ன் ஆப் த டிராகன்
பிஸ்ட் ஆப் பியூரி
Way of the dragan.
புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.

புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.

முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர் முன் கோபத்துடன் நடந்து கொண்டது ஏராளமான விரோதிகளை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்களை பறி கொடுப்பதும் சாதாரணம்.

திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.



ஹாங்காங்கில் உள்ள அவரது சிலை

ஒரு கலையை எப்படி நேசிப்பது, அதனை எங்ஙனம் உச்சத்துக்கு கொண்டு செல்வது என்பதை கற்றுக் கொள்ளும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார் புரூஸ் லீ. அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் அமர்ந்த நாற்காலி காலியாகவே உள்ளது. அதில் அமரும் தகுதியுள்ள ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்க போவதில்லை
http://www.iniyathu.com/wp/?p=336

கொஞ்சமாய் சிரிக்க....

2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகப் கோப்பை



2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நடத்த இருந்த ஆட்டங்களில் 8 போட்டிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் இணைந்து நடத்த தீர்மானிக்கப்பட்டது.

எனினும் பாகிஸ்தானில் இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப் பட்டதை அடுத்து அந்நாட்டில் நடைபெறவிருந்த உலகக் கோப்பை ஆட்டங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்தது.

இந்நிலையில், உலகக் கோப்பை மத்திய நிர்வாகக் குழு நேற்று மும்பையில் ஆலோசனை நடத்தியது. இந்தஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 14 போட்டிகளில் 8 போட்டி இந்தியாவுக்கு வழங்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய போட்டிகள் வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

மேலும் உலகக் கோப்பைக்கான தலைமைச் செயலகம் மும்பையில் செயல்படவும் இந்த கூட்டம் பரிந்துரைத்துள்ளது. உலகக் கோப்பையில் இந்தியா மொத்தம் 29 போட்டிகளை நடத்த உள்ளது. இலங்கை 12 போட்டி களையும், வங்கதேசம் 8 போட்டி களையும் நடத்த உள்ளன.

World Cup logos



பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படியும் ஆடும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது எப்படி இருக்கு???

மாப்பு : எங்கடா கிளம்பிட்ட ??????????????
பாப்பு : எனக்கு செருப்பு வாங்கணும் அதுக்காக செருப்பு கடைக்கு போறேன் !!!
மாப்பு : ஹா ஹா !! நீ ஒரு விவரம் இல்லதவண்டா செருப்பு வாங்க செருப்பு கடைக்கா போவாங்க ????
பாப்பு : அப்புறம் வேற எங்கடா போவாங்க ?????????????
மாப்பு : என்கூடவா பக்கத்து தெருல ஒரு அரசியல் மீட்டிங் நடக்குது அங்க போவோம் இப்பெல்லாம் செருப்பு கடைக்காரங்களே அங்க போய் பார்த்துதான் டிசைன் பண்ணறாங்க !!!

நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன்
போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'



ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே
நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக
இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த
அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."

"என்ன ஆயிற்று அவருக்கு?"

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது"

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்"



நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட
பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம்
சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு
தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல,
குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட
சொல்றீங்க?"

நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு
டிப்ஸ் கொடுத்தேன்"



அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு
சொன்னிங்க.



"ஆடி மாத கோர்ட்டில் கேஸ் போடாதே என்று சொன்னனே!"
"என்ன ஆச்சு?"
"தள்ளுபடி ஆயிடுச்சு!"




துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே
சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம்
காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன்
ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா
எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி
சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.
ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்?
பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு
இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு,
அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார்
அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத்
துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில
விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான்
சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

கொஞ்சம் யாலியாக இருப்போம் வாங்க......!

ஞாபக மறதி

நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. .

இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார்.

உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்


பல் மருத்துவர்

பல் மருத்துவர் அறையில் பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடை முறை வந்ததும், மருத்துவரை பார்க்கச் சென்றார்.

மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கைக் கடிகாரத்தை பார்த்த டாக்டர், அந்த பெண்மணியிடம் வழக்கமாக பல்லை நான் பிடுங்கும் போது, பலமாக கத்துவீர்களே அதுபோல கத்துவீர்களா எனக் கேட்டார்.

உடனே அந்த பெண்மணி, இந்த சிகிச்சை எனக்கு பழகிவிட்டது. இப்போது பல்வலி அதிகம் இல்லை எனவே கத்தமாட்டேன் என்றார்.
அதைக் கேட்ட டாக்டர் இல்லை இல்லை இந்த முறை நீங்கள் தயவு செய்து அதுபோல் கத்துங்கள் என்றார்.

அந்த பெண்மணி புரியாமல் ஏன் என்று கேட்க, டாக்டர் எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. வெளியே நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர். உங்கள் சத்தத்தை கேட்டு பாதிபேர் ஓடி விடுவார்கள் என்று பதில் அளித்தார்.


கிராமவாசி

கிராமவாசி ஒருவர்,உலக நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்பினார். இதற்காக அவர் பிரபல சுற்றுலா நிறுவனத்தை அணுகினார். சுற்றுலா நிறுவனம் சொன்ன கட்டணத்தை செலுத்திவிட்டு, குறிப்பிட்ட தினத்தன்று அவர் பயணமானார். முதல் நாள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார்.

அப்போது அவர், சுற்றுலா நிர்வாகியிடம், எப்போது சாப்பிடலாம் என்று கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதிய உணவு 11 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை உணவு 3 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு உணவு 7மணி முதல் 11 மணி வரையிலும் ஓட்டலில் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதனைக் கேட்ட கிராமவாசி, நடுவே கிடைக்கும் ஒவ்வொரு மணி நேரத்தில் நான் எப்படி ஊர் சுற்றி பார்ப்பது என்று அலறினார்.


சூப்பர் மார்க்கெட்

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இரண்டு வாலிபர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட முதலாவது வாலிபர், காணாமல் போன என் மனைவியை தேடிக் கொண்டு வந்ததால் உங்களை பார்க்காமல் மோதிவிட்டேன் என்றார்.

அதற்கு இரண்டாவது வாலிபர் பரவாயில்லை என்று கூறி, நானும் காணாமல் போன என் மனைவியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார். மேலும், உங்கள் மனைவி எப்படி இருப்பாள் என்று கூறுங்கள் என்று கேட்டார்.

உடனே முதலாமவர், என் மனைவி சிவப்பாக, உயரமாக இருப்பாள் என்றும் பச்சை நிற புடவை கட்டியிருப்பாள் என்றும் கூறிவிட்டு, உங்கள் மனைவியின் அடையாளத்தை கூறுங்கள் என்றார்.

அதற்கு இரண்டாமவர், அவரைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவர் போனால் போகட்டும். முதலில் உங்கள் மனைவியை தேடுவோம் என்றார்.


மாப்பிள்ளை

வேலை இல்லாமல் வெட்டியாக இருந்த ஒருவர் மாமியார் வீட்டிற்கே சென்று வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்ட திட்டமிட்டிருந்தார்.

மாமியார் வீட்டிற்கு சென்ற அவருக்கு முதல் சில தினங்கள் ராஜமரியாதை கிட்டியது.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறையத் தொடங்கியது. ஒரு நாள் இரவு சிற்றுண்டிக்காக பொங்கல் செய்து பரிமாறினார்கள்.

பொங்கலின் ருசியில் மயங்கிய மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்பிட வேண்டும் என்று விரும்பினார். இருந்தாலும் வாயைத் திறந்து கேட்க கூச்சமாக இருந்தது.

இதனால் காலியாக இருந்த சாப்பாட்டு தட்டைத் தட்டிக் காண்பித்து இந்தத் தட்டு மிகவும் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியது என்று கேட்டார்.

மாப்பிள்ளையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மாமியார், பொங்கல் பானையும் காலியாகத்தான் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட, பானையைத் தட்டி, இந்தப் பானை வாங்கிய அதே கடையில் தான் அந்தத் தட்டும் வாங்கினேன் என்றார்.

. தென்னாபிரிக்காவுக்கு IPL சென்ற கதை




இந்தியன் பிரிமியர் லீக் (IPL) இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்களுக்கு இடையில் ஏப்ரல் 18 இல் போட்டிகள் தொடங்குகின்றது. IPL சார்பில் 2 ஆவது கட்ட “Twenty20′ ஏப்ரல் 10 இல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய லோக்சபா தேர்தலை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததால், மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க போட்டிகள் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.



IPL நடந்து வந்த பாதை

மார்ச் 2: லோக்சபா தேர்தல் அறிவிப்பு.

மார்ச் 3: லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.

மார்ச் 4: தேர்தல் நடப்பதால் IPL தொடருக்குத் துணை இராணுவப்படையினர் பாதுகாப்புக் கொடுப்பது கடினம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு.
மார்ச் 5: IPL நிர்வாகம் திகதிகளை மாற்ற முடிவு.

மார்ச் 6: IPL தொடர் திட்டமிட்டபடி நடக்கும். தொடக்கவிழா ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்படுமென அதன் தலைவர் லலித் மோடி அறிவிப்பு.

மார்ச் 7: மத்திய அரசிடம் புதிய அட்டவணை கொடுக்கப்பட்டது.

மார்ச் 9: பாதுகாப்பு அறிக்கை தருமாறு மாநில அரசுகளிடம், மத்திய அரசு கேட்டது.

மார்ச் 10: பாதுகாப்புக்கு IPL. பொறுப்பேற்கும் என லலித் மோடி அறிவிப்பு.

மார்ச் 12: மாநில அரசுகள், மத்திய பாதுகாப்பு வேண்டும் என நிர்ப்பந்தம்.

மார்ச் 13: சென்னை தவிர பிற இடங்களில் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக, மீண்டும் புதிய அட்டவணை வேண்டுமென மத்திய அரசு கேட்டது.

மார்ச் 14: மீண்டும் புதிய அட்டவணை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மார்ச் 15: மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்கும்படி மத்திய அரசு, IPL. இடம் தெரிவித்தது.

மார்ச் 16: பி.சி.சி. ஐ. உள்துறை அமைச்சக அதிகாரிகள் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

மார்ச் 17: புதிய திகதிகளுக்கு இமாசல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் அனுமதியளித்தது. ஆனால், மத்திய அரசு ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தது.

மார்ச் 18: மாகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, குஜராத் என மேலும் 4 மாநிலங்கள் புதிய திகதிகளுக்கு ஒப்புதல் அளித்தன.

மார்ச் 19: வீரர்கள் பாதுகாப்பிற்கு 16 குண்டு துளைக்காத பஸ்களும், 64 கவச வாகனங்களும் வாங்க ஐ.பி.எல். சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

மார்ச் 20: மும்பை டி.ஜி.பி.பாதுகாப்புக் குறித்து புதிய சர்ச்சை கிளப்பினார்.

மார்ச் 21: எந்த விதமான துணை இராணுவப்படை உதவியும் வழங்க முடியாதென உள்துறை அமைச்சர் கைவிரித்தார்.

மார்ச் 22: தொடரை இங்கிலாந்து அல்லது தென்னாபிரிக்காவுக்கு மாற்ற இருப்பதாக மோடி அறிவித்தார்.

மார்ச் 23: இங்கிலாந்தில் நடத்தினால் அதிக செலவு ஏற்படும். அடுத்து நடக்கும் “Twenty20′ உலகக் கிண்ண வசூல் குறையுமென ஐ.சி.சி. பயப்பட்டது.

மார்ச் 24: IPL தொடர் தென்னாபிரிக்காவில் நடக்குமென முறைப்படி லலித் மோடி அறிவித்தார்.

உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வேறுபாடு?

கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது.

இரத்தம் வெவ்வேறு நிறம்

அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்

நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
“கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?”
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்

இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!
இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!

இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!
இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!

கவிக்கோ அப்துல் ரகுமான்

நினைவு படுத்தி பார்க்கிறேன் - யாழ்ப்பாணப் பொது நூலகம்


யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது மே 31 1981 எரிக்கப்பட்டுச் சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. 1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

புத்தாண்டாம் எங்களுக்கு வாழ்த்துகிறார்கள்

வான் நிறைத்த
கரும்புகையோடு
பறிபோன தெருக்களெங்கும்
அடுக்கடுக்காய் சடலங்கள்.
சாவுகளின் ஓலமும்
சத்தமிடும் குண்டுகளும்
வாழ்ந்திருந்த நிலத்தையும்
வசந்தகாலக் கனவையும்
பறித்துக் கொண்டு........

உலகெங்கும் மரண ஓலங்களுடன் பிறக்கவிருப்பதா புத்தாண்டு????

ஸ்கைப் - பயன்படுத்துவது எவ்வாறு?


ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.

நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.

ஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.

ஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.

இதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.
அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போது உங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

பேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.

உங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.

இந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத் தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.

வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில் உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானதாக உள்ளது.

ஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்கு எவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்தி விடவேண்டும்.

நிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள். அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.

உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள் ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளே என்கிற அம்சம்.

வாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோ அப்போதே பெற்றுக்கொள்ளலாம்.

கையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.

குறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையான பயன்பாடு இது.

மேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய தளம் : http://www.skype.com

தொடர்புடைய சுட்டி : VoIP - இணையத் தொலைபேசி


கலைச்சொற்கள் :
ஸ்கைப் - Skype
மடிக்கணினி - Laptop
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
வெப்கேமரா - Web camera
மென்பொருள் - Software Application
தரவிறக்கம் - Download
பயனர் கணக்கு - User Account
ஸ்கைப் உள்ளே / வெளியே - Skype In / Skype Out
கடனட்டை - Credit Card
பேபால் - Paypal
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
செல்பேசி - Mobile / cell phone
வருடச் சந்தா - Yearly fee
வாய்ஸ் மெயில் - Voice Mail
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA - Personal Digital Assistant, Hand held devices

உன்னால் என்ன செய்ய முடியும்?

உன்னால் என்ன செய்ய முடியும்?
உயிரைப் பறிக்கும் நீ
உணர்வைப் பறிக்க முடியுமா?

அகதியாக்கலாம்..
அநாதையாக்கலாம்..
ஒருபோதும் அடிமையாக்க முடியாது.
இன்றைய இழப்புக்கள்
நாளை உயிர்ப்புக்களாகுமென உரமேற்றிக் கொள்கிறோம்.
கல்லறைகளே எங்கள் கருவறைகள்.
நாங்கள் என்றுமே உயிரணுக்கள்.
உருக்குலைக்க முடியாது.
எச்சரிக்கையாய் இருங்கள்.....

போதையில் மூழ்கும் இளைஞர் சமுதாயம்

நாகரீகம் என்ற போர்வையில் பல தீமைகளை நாமே தேடிக்கொள்கின்றோம். இன்று எம் இளைஞர்களில் அதிகமானோர் புகைப்பிடித்தல், போதைப்பொருட்கள் உப யோகித்தல் மற்றும் இது போன்ற பல தீமைகளை நாகரீகம் என்று பறைசாற்றிக்கொண்டு தவறான பாதைக்கு தாமாகவே இழுத்துச் செல்லப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர் பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தன்னுடைய ஆய்வில் கூறுகின்றது.

இன்று எமது நகர்ப்புறங்களில் நவீன உணவகம் என்ற பெயரில் நடன உணவகமாக மாறி விட்ட பல நடன விடுதிகள் இளைய சமுதாயத்தினை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. மெல்லிய விளக்கொளியில் இன்றைய இளைஞர், யுவதிகள் கூத்தும், கும்மாளமுமாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு போதைப் பொருட் களை எந்தெந்த வழியிலெல்லாம் பயன்படுத்தலாம் என்று தனி வகுப்பே நடத்தப்படுகின்றது.

மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் இவ்விதமான பழக்கங்கள் சிறு குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. காரணம் அவர்கள் தமது வீடுகளை மதுச்சாலைகளாக ஆக்கிக் கொண்டமையேயாகும். எமது நாட்டின் சில பகுதிகளிலும் இப்பழக்கம் நடைபெறுவதை எம்மால் அறியக்கூடியதாக வுள்ளது. இதனை பார்க்கும் வீட்டில் உள்ள பிள்ளைகள் சிறு வயதிலேயே ‘குடிமக்களாக’ மாறிவிடுகின்றனர்! பெரும்பான்மையானோர் 17 வயதில் இருந்து 25 வயதுக்குள் தான் இப்பழக்கத்தை பழகுகின்றனர்.

வெளியில் தனி இடங்க ளெடுத்து தங்குவதும், நண்பர்கள் அறையை நாடிச் செல்வதும் தொழில் நிமித்தம் வெளியே செல்வதும் மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களை பாவிப்பதற்கும், நெறிபிறழ்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலான திரைப்படங் களைப் பார்ப்பதற்கும் மற்றும் புகைத்தல் போன்ற பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. இவற்றிற்கு யார் காரணம்? பெற்றோர்களே! சிந்தியுங்கள்.......

கலைஞர் - ஒரு தமிழினக் கொலைஞர்!

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க
துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!


(எனக்கு மிகவும் பிடித்த கலைஞருக்கு பிடிக்காத கவிதை.
வார்த்தைகளை செதுக்கிய அன்பருக்கு நன்றிகள்)

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள்


மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு

தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து

சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு

குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே

பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே
எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு

இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி

செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு

இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்

நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு

இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்

மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு

இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்

காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,
முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு.


கனக்கும் இதயத்தின் அனல் பறக்கும் வரிகள்
தெறிக்கும் உண்மையை செதுக்கும் கவிகள்...
படித்ததில் சிந்தனைகளை உரசிப்பார்த்த வரிகள்....

அமெரிக்க வியட்நாம் யுத்தத்தை மையமாக வைத்து தயாரித்த திரைப்படங்கள் இவை

1968 Tunnel Rats
1969 (film)
84C MoPic
A.W.O.L. (2006 film)
Across the Universe (film)
Air America (film)
Alamo Bay
American Gangster (film)
The Anderson Platoon
Apocalypse Now
Apocalypse Now Redux
The Ballad of Andy Crocker
Bat*21
A Better Tomorrow 3
Birdy (film)
Born on the Fourth of July (film)
The Boys in Company C
Braddock: Missing in Action III
Bullet in the Head
Casualties of War
Cayo (film)
China Beach
Combat Shock
Coming Home
Dead Presidents
Deathdream
The Deer Hunter
Dien Bien Phu (film)
Distant Thunder (1988 film)
Don't Cry, It's Only Thunder
Double Target
Faith of My Fathers (film)
Father Xmas
Flight of the Intruder
The Foot Shooting Party
Forrest Gump
Free The Army tour
Friendly Fire (1979 film)
Full Metal Jacket
Gardens of Stone
Go Tell the Spartans
Good Morning, Vietnam
The Green Berets (film)
Gunman (film)
Hair (film)
Hamburger Hill
The Hanoi Hilton (film)
Heaven & Earth (1993 film)
Hoa-Binh (film)
Héroes de Otra Patria
In Country
Jacknife
Jacob's Ladder (film)
Journey from the Fall
The Killing Fields (film)
The Last Full Measure (2004 film)
Missing in Action (film)
Missing in Action 2: The Beginning
More American Graffiti
Music Within
Nam's Angels
O.k. (film)
The Odd Angry Shot
Off Limits (1988 film)
Operation Dumbo Drop
Platoon (film)
Platoon Leader (film)
The Quiet American (film)
The Quiet American (2002 film)
R-Point
Rescue Dawn
Rolling Thunder (film)
A Rumor of War (miniseries)
Some Kind of Hero
Sticks and Bones (film)
Sunny (2008 film)
The Siege of Firebase Gloria
The Things They Carried
Thou Shalt Not Kill... Except
Tigerland
To the Shores of Hell
Tour of Duty (TV series)
Tribes (film)
Uncommon Valor
Vietnam War in film
The Walking Dead (1995 film)
The War at Home (film)
Watchmen (film)
We Were Soldiers
White Badge
Who'll Stop the Rain
Word of Honor (2003 film)
A Yank in Viet-Nam

World War II

இரண்டாம் உலக யுத்தத்தை மையாமக வைத்து தயாரித்த திரைப்படங்கள்.
எனக்கு கிடைத்த படங்களின் பெயர்கள் இவைகள்.

5 Fingers (1952)
13 Rue Madeleine (1947)
49th Parallel (1942)
Action in the North Atlantic (1943)
Anzio (1968)
Ashes and Diamonds (1958)
Attack (1956)
Ballad of a Soldier (1960)
Band of Brothers (2001)
Bataan (1943)
Battle Circus (1953)
Battle of Blood Island (1960)
Battle of the Bulge (1965)
The Bedford Incident (1965)
The Best Years of Our Lives (1946)
The Big Red One (1980)
A Bridge too Far (1977)
The Bridge at Remagen (1969)
The Bridge on the River Kwai (1957)
The Bunker (1981)
The Burmese Harp (1967)
The Caine Mutiny (1954)
Captain Corelli's Mandolin (2001)
Catch-22 (1970)
China (1943)
Come and See (1985)
Conspiracy (2001)
The Counterfeit Traitor (1962)
Cross of Iron (1976)
D-Day: The Sixth of June (1956)
Darby's Rangers (1957)
Dark Blue World (2001)
Das Boot (1982)
The Desert Fox (1951)
The Desert Rats (1953)
The Devil's Brigade (1968)
The Diary of Anne Frank (1959)
The Dirty Dozen (1967)
Donovan's Reef (1963)
The Eagle has Landed (1976)
Enemy at the Gates (2001)
Escape from Sobibor (1987)
Europa, Europa (1991)
Father Goose (1964)
Fatherland (1994)
The Fighting Rats of Tobruk (1944)
The Fighting Seabees (1944)
Fires on the Plain (1962)
Five Graves to Cairo (1943)
The Flight of the Phoenix (1965)
Force 10 From Navarone (1978)
A Foreign Affair (1948)
Foyle's War (2002)
From Here to Eternity (1953)
The Gathering Storm (2002)
A Generation (1954)
Gentleman's Agreement (1947)
The Great Escape (1963)
The Grey Zone (2001)
Guadalcanal Diary (1943)
Gung Ho! (1943)
The Guns of Navarone (1961)
Halls of Montezuma (1950)
Hanover Street (1979)
Hart's War (2002)
Heaven Knows, Mr. Allison (1957)
Hell is for Heroes (1962)
The Hill (1965)
Hitler: The Last Ten Days (1973)
The House on 92nd Street (1945)
In Harm's Way (1965)
It Happened Here (1966)
Kanal (1957)
Kelly's Heroes (1970)
King Rat (1965)
The Long Way Home (1997)
The Longest Day (1962)
MacArthur (1977)
The Man Who Never Was (1956)
The McConnell Story (1955)
Memphis Belle (1990)
A Midnight Clear (1992)
Midway (1976)
Mission to Death (1966)
Mister Roberts (1955)
Mosquito Squadron (1970)
The Night of the Generals (1967)
Nuremberg (2000)
Objective, Burma! (1945)
Operation Petticoat (1959)
O.S.S. (1946)
Paisan (1948)
Patton (1970)
Pearl Harbor (2001)
The Pianist (2003)
PT 109 (1963)
Raid on Rommel (1971)
Retreat Hell (1952)
Run Silent, Run Deep (1958)
Sands of Iwo Jima (1950)
Saving Private Ryan (1999)
Schindler's List (1993)
The Seventh Cross (1944)
Sink the Bismarck (1960)
Ski Troop Attack (1960)
South Pacific (1958)
Stalag 17 (1953)
Stalingrad (1992)
The Story of G.I. Joe (1945)
Swing Kids (1993)
They Were Expendable (1945)
The Thin Red Line (1999)
Three Came Home (1950)
Three Comrades (1938)
Thirty Seconds over Tokyo (1944)
To Hell and Back (1955)
Too Late the Hero (1970)
Tora! Tora! Tora! (1970)
The Train (1965)
Truman (1995)
The Tuskegee Airman (1995)
Twelve O'Clock High (1949)
U-571 (2000)
Von Ryan's Express (1965)
Wake Island (1942)
The Wannsee Conference (1984)
When Trumpets Fade (1998)
Where Eagles Dare (1969)
Windtalkers (2002)
Wing and a Prayer (1944)
The Winter War
The Young Lions (1958)

அமெரிக்க விளையாட்டுச்சாமான்கள்!!!!




வருகிறது 3டி இன்டெர்நெட்

ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு 62-networkservice01அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை
இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது.

ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் போன்கள் என மிகவும் சுவாரஸ்யமான விஷயங் களை இந்த கட்டுரை விவரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந் தாலும் சிகிச்சை பெறக் கூடிய வசதியாகும்.

வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும், புகைப்படம் சார்ந்த தகவல்களை இன்டெர்நெட் மூலம் அனுப்பி வைப்பதும், மருத்துவ வசதியை பரவலாக்க உதவி செய்திருக்கிறது.

வருங்காலத்தில் இந்த சேவை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று ஐபிஎம் கருதுகிறது.
இருந்த இடத்தில் இருந்தே மருத்துவர்கள் எங்கோ இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வயர்லெஸ் சார்ந்த தொழில்நுட்பம் கைகொடுக்க உள்ளது.

அமெரிக்கர்கள் நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி செல்வதாலும், ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்கள் மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் வசிப்பதாலும், வயர்லெஸ் மூலம் மருத்துவ வசதி வழங்கும் சேவை முக்கியத்துவம் பெறுகிறது.

நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி கண்காணிப்பு அவசியம் என்னும் நிலையில், வயர்லெஸ் மூலம் அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணிக்க முடியும்.

அதே போல மருந்தின் செயல்பாடு மற்றும் பாதிப்பு ஆகிய விவரங் களையும் மருத்துவர்கள் தெரிந்து கொள்ள முடியும். கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளின் நிலை பற்றிய விவரங்கள் மற்றும் எக்ஸ்ரே படங்களை வயர்லெஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை பற்றி மருத்துவ நிபுணர்களோடு கலந்தாலோசிக்க முடியும்.

ரத்த அழுத்தம், நாடி துடிப்பை பரிசோதிப்பது போன்ற செயல்களையும் மருத்துவர்கள் இருந்த இடத்தில் இருந்தே மேற்கொள்ள முடியும்.
மருத்துவத்துறையில் இது மகத்தான மாற்றங்களை கொண்டுவரும் என்றால், உடனடி மொழிபெயர்ப்பு சாப்ட்வேர், வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மற்றவர்களோடு சுலபமாக பேச உதவி செய்யும்.

தற்போது மொழி பெயர்ப்பு சாப்ட்வேர் புழக்கத்தில் இருந்தாலும், வருங்காலத்தில் இவற்றின் வேகம் மற்றும் செயல்திறன் பன்மடங்கு அதிகரித்து உடனுக்குடன் மொழி பெயர்க்கும் ஆற்றல் உண்டாகும் என்று கருதப்படுகிறது.

இதே போல இன்டெர்நெட் அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது இன்டெர்நெட் முப்பரிமாண தன்மை கொண்ட 3டி இன்டெர்நெட்டாக பரிணமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இன்டெர்நெட்டில் தனி உலகத்தை உண்டாக்கியிருக்கும் செகன்ட்லைப் போன்ற வீடியோ கேம்கள் இந்த முப்பரிமாண இன்டெர்நெட்டுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.

உடைகளை இன்டெர்நெட்டி லேயே அணிந்து பார்ப்பது போன்ற வசதிகள் முப்பரிமாண இன்டெர்நெட்டில் சாத்தியமாகலாம்.

இதே போல தண்ணீர் விநியோகத் திலும் புதுமையான வழிகள் கண்டறியப்பட உள்ளன.
இன்டெர்நெட்டை பயன்படுத்தி, தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் மிகவும் மேம்பட்ட விநியோக முறைகள் உருவாக்கப்பட உள்ளன.

நேனோ தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன முறைகளை பயன்படுத்தி இவை உருவாக்கப்பட்டு வருகின்றன.ஐபிஎம் குறிப்பிடும் மற்றொரு அதிசய தொழில்நுட்பம் மனதை அறியும் சக்தி கொண்ட போன்கள் ஆகும்.ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் போன்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் சக்தி கொண்டதாக இருக்கிறது.இதன் அடுத்தகட்டமாக இருப் பிடத்தை உணர்ந்து, அதற்கேற்ப சேவைகளை இயக்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட போன்கள் உருவாகலாம்.

உதாரணமாக ரெயில்வே நிலையம் அல்லது மாநாடு அறை போன்ற பலர் கூடியுள்ள இடங்களில் நுழையும் போது செல்போன் அதனை தானாக உணர்ந்து கொண்டு, வாய்ஸ்மெயில் சேவையை இயக்கலாம்.

அதே போல நள்ளிரவு தாமதமாக வீட்டிற்கு திரும்பினால் செல்போன் அதனை உணர்ந்து கொண்டுபசியாற பிட்சாவுக்கு ஆர்டர் கொடுக்கலாம். இந்த தொழில்நுட்பங்களை பற்றியெல்லாம் ஐபிஎம் கட்டுரை விரிவாக பேசுகிறது.

http://www.getittamil.com/index.php?option...8&Itemid=70

சார்ல்ஸ் டார்வின் : 200

ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம்.

சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தாய்வழியில் இன்றளவும் புகழ்பெற்ற வெட்ஜ்வுட் என்ற சீன முறை பீங்கான் பாத்திரங்களையும் கலைப்பொருட்களையும் தயாரிக்கும் குடும்பம். தந்தை எராஸ்மஸ் டார்வின் அந்த நாட்களில் பிரிட்டனின் முதல்தர அறிஞர்களுள் ஒருவராக அறியப்பட்டவர். முதலில் மருத்தவம் பயில ஆசைகொண்ட டார்வின் ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் கிறிஸ்தவ மதபோதகராக மாற கேம்ப்ரிட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அந்த நாட்களில் கிறிஸ்துவத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றைத் தன் கண்டுபிடிப்புகள் தகர்க்கப் போகின்றன என்று அறிந்திருக்கமாட்டார்.

கேம்ப்ரிட்ஜில் இயற்கை வேதாந்தம் (Natural Theology) என்ற பாடத்தைப் படிக்க நேர்ந்தார். அப்பொழுது ஜான் ஹெர்ஷெல் (John Herschel) என்பவரின் புத்தகம் ஒன்றைப் படித்தார். அதில் “சுற்றிலும் இருப்பவற்றைக் கூர்ந்து நோக்குதலில் வழியே இயற்கையின் நடைமுறை விதிகளை அறிந்து கொள்வதே இயல் தத்துவத்தின் (Natural Philosophy) உச்சம்” என்ற ஹெர்ஷல் விளக்கம் டார்வினை மிகவும் ஈர்த்தது. கூடவே ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஃபன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) என்ற மேதையின் பயணங்களின் வழியே உலகையும் இயற்கையையும் புரிந்துகொள்ளும் உன்னதத்தைப் பற்றிய விளக்கம் சேர்ந்துகொள்ள நெடும் பயணம் ஒன்றை மேற்கொண்டு அதனூடாக இயற்கை விதிகளை ஆய்வதில் டார்வினுக்கு ஆர்வம் பெருகியது.

1831-ல் ஹெச்.எம்.எஸ் பீகிள் (HMS Beagle) என்ற கப்பலில் இங்கிலாந்தில் தொடங்கி, தென்னமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியாக தென்கோடியில் இருக்கும் ஃபால்க்லண்ட் என்ற தீவிற்குச் சென்றார். அங்கிருந்து மேற்குக் கடற்கரை வழியாக தென்னமெரிக்காவின் வட மேற்கில் இருக்கும் கலாபகஸ் என்ற தீவுக்கூட்டத்தில் பல நாட்கள் தங்கினார். அங்கிருக்கும் பறவைகளையும் விலங்கினங்களையும் தாவரங்களையும் அவர் இதுவரை வேறெங்கும் கண்டதில்லை. தனித் தீவுக்கூட்டத்தில் தனிமை வாய்ந்த உயிரினங்கள் எப்படி வந்தன, அவை ஏன் அங்கே நன்றாகச் செழித்து வளர்கின்றன என்று அவருக்குத் தோன்றிய கேள்விதான் நாம் இன்றைக்கு பூமியில் உயிரிகளின் தோற்றமும் வளர்ச்சியும் மாற்றமும் குறித்த புரிதல்களுக்கு வழிகாட்டுகின்றன. தொடர்ந்து ஆஸ்திரேலியா வழியாக மீண்டும் இங்கிலாந்தை ஹெச் எம் எஸ் பீகிள் 1836 ஆம் ஆண்டு வந்தடைந்தது.

தன் கடற்பயணத்தின்போது சேகரித்த தகவல்கள், தரவுகள், பயணக்குறிப்புகள் இவற்றின் மீது கிடத்தட்ட இருபது வருடங்கள் தொடர்ச்சியான ஆய்வை மேற்கொண்டார் டார்வின். தொடர்ந்து அவர் எழுதிய On the Origin or Species by Means of Natural Selection என்ற புத்தகம் 1859-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அதில் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற அமைப்புகளைப் பெற்றிருக்கும் உயிரினங்கள் அவ்வாறு ஏற்பில்லாத உயிரினங்களைக் காட்டிலும் எளிதில் எப்படி ஜீவிக்க முடிகிறது என்று விளக்கினார். வலுவற்றவை தங்காமல் அழிந்துபோக வலுவுள்ளவற்றின் சந்ததி எளிதில் பெருகிறது.

சந்ததிப் பெருக்கத்தில் சற்று மாறுதல்கள் ஏற்பட்டு வேறு குணங்களைக் கொண்ட ஒரு புதிய உயிரி பிறந்தால் அது சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் பட்சத்தில் நன்கு வளர்ந்து தன் குணங்களைக் கொண்ட சந்ததியைப் பெருக்குகிறது. இதுவே தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் புதுப்புது உயிரினங்கள் தோன்ற வழிவகுக்கிறது.

டார்வினின் இந்தக் கோட்பாடு அந்த நாட்களில் (ஏன் இன்றுகூட) பலத்த சர்ச்சைக்குள்ளானது. கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆதி கடவுள் இந்த உலகை ஏழு நாட்களில் படைத்தார். ஆனால் டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளின்படி உயிரியலில் மேல்நிலையிலுள்ளவை அவற்றின் கீழிருக்கும் உயிரினங்களில் ஏற்பட்ட தற்செயலான மாறுதல்களால் படிப்படியாக வளர்ந்து உருவானவை. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு கிட்டத்தட்ட நூற்றைம்பது வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நூற்றைம்பது வருடக் கேள்விகளும் ஆய்வுகளும் அதற்கு மேலும் வலுவைத்தான் சேர்த்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் உயிரிகளில் மரபைத் தாங்கி இனப்பெருக்கத்தின்போது அதை முன்னெடுத்துச் செல்லும் டி.என்.ஏ-வின் அமைப்பும் செயற்பாடும் புரிந்துகொள்ளப்பட்டது. இப்பொழுது உயர்நுட்ப மரபியல் ஆய்வுகளின் வழியே மூலக்கூறு அளவில் துல்லியமாகப் பரிணாமம் எப்படி செயற்படுகிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது. குரங்குக்கும் மனிதனுக்கும் ஒற்றைக் குரோமோசோமின் இழைவழியே இருக்கும் மாறுபாட்டைக் கடந்த சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்திருகிறார்கள்.

டார்வின் வாழ்ந்த காலத்தில் மரபணுக்களைப் பற்றிய அறிவு கிடையாது, டி.என்.ஏ, குரோமோசோம் இவற்றைப் பற்றித் தெரியாது. இன்றைக்கு அவர் வாழ்ந்திருந்தால் தன் கண்டுபிடிப்புகள் துல்லியமான சோதனைகளில் நிரூபணமாவதைக் கண்டு மகிழ்வார் என்பது நிச்சயம். டார்வினின் அறிவியல் முறை தனித்தன்மையாது. மலையுச்சியில் நின்று கடற்கரைப் பெரும்பரப்பை அவர் கண்டார். அங்கிருந்த ஒவ்வொரு செடி, கொடி, விலங்கு, மீன், தொடங்கி அங்கே கிடைக்கும் கனிமங்கள், பெய்யும் மழையளவு, மாறும் காலநிலை, பிற நிலங்களுக்கும் அதற்கும் இருக்கும் மாறுபாடுகள் இவற்றைத் துல்லியாம ஆராய்ந்தார். அப்பொழுதும் அவரால் முழு பெருநிலப்பரப்பின் பெரும நிலையையும் தொடர்ச்சியாகக் காணமுடிந்தது.

ஒற்றை மணற் துகளில் உலகத்தைக் காணும் தனித்திறன்தான் டார்வினை இருநூறு வருடங்களுக்குப் பிறகும் நாம் கொண்டாட முக்கிய காரணம்.

நன்றி - யாழ்